
பிப்ரவரி 20, மூணாறு (Kerala News): கேரள மாநிலம், மூணாறு (Munnar) அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மூணாறில் உள்ள எக்கோ பாய்ண்ட் என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பலர் மூணாறு தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி 2 மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Viral Video: ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்; சிபிஆர் அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர்.. வீடியோ வைரல்..!
மூவர் பலி:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நாகர்கோவிலில் இருந்து கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் 10 பெண்கள் உட்பட 45 பேர் மூணாறுக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அப்போது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது (Van Accident) விசாரணையில் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.