Railway Track (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 26, பெங்களூரு (Karnataka News): ஆந்திர மாநிலத்தில உள்ள சித்தூரை சேர்ந்த லோகேஷ் (வயது 23), சசிகுமார் (வயது 20) மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் (Call Taxi Driver) பாலசுப்ரமணியம் (வயது 22) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் வேலைதேடி பெங்களூருக்கு வந்துள்ளனர். Husband Stabbed To Wife: கணவனை பிரிந்து தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை..!

இந்நிலையில், இவர்கள் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே சின்னப்பனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர், இரவு நேரத்தில் இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் (Express Train) இவர்கள் மீது மோதியது. இவர்களின் கவனக்குறைவால் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், இறந்து கிடந்த அவர்கள் 3 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.