Rape File pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, என்டிஆர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள பரிதலா கிராமத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், 2ஆம் ஆண்டும் படிக்கும் மாணவி ஒருவரும், ஹுசைன் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். School Girl Abuse: பள்ளி கழிவறையில் மாணவி பலாத்காரம்.. ஆசிரியருக்கு அடி, உதை..!

இளம்பெண் பாலியல் பலாத்காரம்:

இந்நிலையில், சம்பவம் நாளன்று ஹுசைன் தன்னுடைய அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். அதன் பின்னர், ஹுசைன் மட்டும் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து, உள்ளே சென்ற ஷேக் கலி ஷாஹித் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

3 பேர் கைது:

புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவத்தில் ஈடுபட ஹுசைனுக்கும், ஷேக் கலிக்கும், சிந்தல் பிரபு தாஸ் என்பவர் உதவி செய்துள்ளார் என்று தெரியவந்தது. இதன் பேரில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3