
பிப்ரவரி 11, தானே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தானே (Thane) மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர், கடந்த டிசம்பர் 29, 2024 அன்று பிவாண்டியின் (Bhiwandi) காமத்கர் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தற்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் 22 வயது நண்பரையும், அவரது காதலியையும், தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு நபரையும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 09) கைது செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Viral Video: பிரியாவிடை நிகழ்வு கொண்டாட்டம்; 12ஆம் வகுப்பு மாணவர்கள் சொகுசு கார்களில் ஸ்டண்ட்.. வீடியோ வைரல்..!
பெண் பாலியல் பலாத்காரம்:
இதுகுறித்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர், மதியம் தன்னுடன் நடைப்பயிற்சிக்கு வருமாறு அவளை வற்புறுத்தி, பின்னர் ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை மேலும் இருவர் வீடியோ எடுத்து, பின்னர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சமூக ஊடக தளங்களில் இந்த காணொளி வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மூவர் கைது:
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், குற்றவாளி சந்த் கான் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான ஜமீர் கான் (வயது 22) மற்றும் கவிதா (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டார். மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, நாளை (பிப்ரவரி 12) வரை போலீஸ் காவலில் இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3