Death | Electric Shock File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 24, ஜெய்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், முண்டியாட்-கட்லு (Mundiyad-Kadlu Road) சாலையில் கின்சார் எனும் பகுதியில், பிதராம் தேவசி, கல்லுரம் தேவசி மற்றும் ஜெதராம் தேவசி ஆகிய 3 பேரும், நேற்று (மார்ச் 23) கட்லு கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து கிடந்துள்ளது. Heart Attack: வீட்டு வாசலில் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்; அரசியல்கட்சி பிரமுகரின் உயிர் நொடியில் பிரிந்த சோகம்.!

3 பேர் உடல் கருகி பலி:

இதனை கவனிக்காமல் சென்ற அவர்கள் பைக்கில் உரசியதும், மின்சாரம் பாய்ந்தது. இதனால், உடனே பைக்கில் தீப்பற்றி எரிந்தது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் எரிந்து உடல் கருகி பலியாகினர். இதனை நேரில் பார்த்தவர்கள், மின்சாரத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால், 3 பேர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.