Three People Burnt To Death (Photo Credit: @Rajpathak4up X)

டிசம்பர் 31, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் (Gorakhpur) உள்ள விசுன்பூர் குர்த் தோலா தன்ஹாவைச் சேர்ந்தவர் சிவராஜ் நிஷாத் (வயது 24). இவர், தனது 9 வயது மருமகள் மற்றும் 2 வயது மகளுடன் சோன்பர்சா சந்தையில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பைக் மீது உயர் அழுத்த கம்பி (High Tension Wire) அறுந்து விழுந்ததில் மூவரும் உடல் கருகி பலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (டிசம்பர் 29) நடந்தது. Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!

உடல் கருகி பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரக்பூர் எய்ம்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து சடலத்தை அனுப்ப முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மறுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து தெரிவிக்கையில், முதற்கட்ட விசாரணையில் குரங்கு ஒன்று கம்பி மீது விழுந்து, அதனால் அறுந்து விழுந்திருக்கலாம் என்றார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ: