Rani Velu Nachiyar | PM Narendra Modi (Photo Credit: Wikipedia / ANI)

ஜனவரி 03, புதுடெல்லி (New Delhi): சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட, வீரமங்கை வேலுநாச்சியார் (Velu Nachiyar) பிறந்த தினம் ஜனவரி 03, 2025ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கிய வேலு நாச்சியார், உருது, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர் ஆவார். ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய வீரமங்கை, தனது கற்றல்-ஆக்ரோஷத்தால் இன்றளவும் வீரம்-கல்வி நிறைந்த மங்கையாகவும் அறியப்படுகிறார். Velu Nachiyar: "பெண்ணுரிமை போற்றுவோம்" - வேலுநாச்சியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.! 

பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்:

வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அவரை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் வேலுநாச்சியாரின் தியாகம், வீரம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வீரம் மிக்க ராணி வேலு நாச்சியாரை, அவரின் பிறந்தநாளில் நாம் நினைவுகூருவோம். ஆங்கிலேயருக்கு எதிராக, காலனித்துவ ஆட்சிக்கு எதிராக, வீரப்பெண்ணாக போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர். ஒப்பீடு செய்ய இயலாத வீரம், புத்திசாலித்தனம் ஆகியவை அவரின் ஆயுதமாக இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிராக, சுதந்திரத்திற்கு போற எதிர்கால தலைமுறையை ஊக்குவித்த தலைவர்களில் முக்கியமானவர். பெண்களை மேம்படுத்த அவரின் பங்கு பாராட்டுதலுக்குரியது" என தெரிவித்துள்ளார்.

வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அவரின் வீரத்தை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி: