Tirupati Laddu Row (Photo Credit: @Openthemag / @nethrapal X)

செப்டம்பர் 30, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி (Tirupati Temple), வெங்கடாசலபதி கோவில் லட்டு பிரசாதத்தில், லட்டு (Tirupati Laddu Row) தயாரிப்பின் போது பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்து இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயத்தை தெரிவித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதுகுறித்த சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். ஆந்திராவை முந்தைய ஆண்டுகளில் ஆட்சி செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனிடையே, திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகம் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஆர் டைரி நிறுவனத்தில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்திருந்தனர். Tirupati Laddu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவனத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு..! 

ஏ.ஆர் டைரி நிறுவனர் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பம்:

இந்நிலையில், திண்டுக்கல் ஏ.ஆர் டைரி பூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகர் மற்றும் அவரின் நிறுவனத்தில் பணியாற்றுவோர், திருப்பதி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். திருப்பதி காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஏ.ஆர் டைரி நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கைதுக்கு முன்னதாக திண்டுக்கல் நிறுவனத்தின் இயக்குனர் தனது தரப்பில் தவறு இல்லை என்று கூறி முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.