டிசம்பர், 7: ஸ்ரீ அம்மா யங்கர் ஐயப்பன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (Sri Devi), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆவார். இவரின் தந்தை ஐயப்பன் வழக்கறிஞர். ராஜேஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், சரளமாக தமிழ் பேசுவார்.
குழந்தை நட்சத்திரமாக: கடந்த 1967ல் குழந்தை நட்சத்திரமாக கந்தன் கருணை திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பிற்காலத்தில் திரைத்துறையில் நடிப்பதையே தனது முழு வாழ்க்கையாக்கினார். அதனைத்தொடர்ந்து, 1970ல் மா நன்னா நிர்தோஷி என்ற படத்தின் வாயிலாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதில், மலையாளத்தில் கடந்த 1971ம் ஆண்டு வெளியான பூம்பட்டா திரைப்படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றார். 1967ல் தமிழ் திரைஉலகுக்கு பரிட்சயமான நடிகை ஸ்ரீதேவி, 1972ல் ராணி மேரா நாம் என்ற படத்தில் நடித்து ஹிந்தி திரையுலகுக்கும் பரிட்சயமானார். இது அவரின் பாலிவுட் வாழ்க்கைக்கு தொடக்க புள்ளியாகவும் அமைந்தது.
16 வயதினிலே: கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல திரை நாயகர்களுடன் இவர் அன்றே நடித்துவிட்டார். கடந்த 1977ல் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த காயத்ரி திரைப்படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து, 16 வயதினிலே, கவிக்குயில் படங்களிலும் நடித்திருந்தார். இன்றளவும் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் மூன்று முடிச்சு படத்திலும் நடித்துள்ளார். Thoothuvala Dosa: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் தூதுவளை தோசை செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.!
இவ்வாறாக குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்த ஸ்ரீதேவி, கதாநாயகியான பின்னர் தனது தரத்தினை மேலும் உயர்த்தி பாலிவுட் சூப்பர்ஸ்டார்களுடன் கைகோர்த்து நடிக்க தொடங்கினர். அன்றைய காலத்தில் பல மொழிகளில் நடித்து பெயர் வாங்கிய தமிழ் நடிக்கையில் இவர் மறக்க முடியாதவராக இருக்கிறார்.
பாலிவுட் பயணமும், திருமணமும்: 1997ல் கபூர் குடும்பத்தாரர்களில் ஒருவரான போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி, அவரது தாயாரின் மரணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர், 2004-களில் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்த ஸ்ரீதேவி, பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றினார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.
தந்தைக்காக அரசியல் பிரச்சாரம்: இவர் தனது தந்தையாக கடந்த 1989ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், சிவகாசி தொகுதியில் களம்கண்ட தனது தந்தைக்காக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். ஆனால், மக்கள் அன்று அவரது தந்தையை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஸ்ரீதேவியின் தந்தை தோல்வியை சந்தித்தார்.
கலையின் வடிவம்-சகாப்த்திய நடிகை: கேமராவுக்கு முன்பு ஸ்ரீ தேவியாக கலை நயத்துடன் நின்று காட்சி தரும் நடிகை ஸ்ரீதேவி, கேமராவுக்கு பின்னால் சுறுசுறுப்பு கொண்ட அமைதியான பெண்ணாக இருந்து வந்துள்ளார். கடந்த 2018 பிப்ரவரி 20ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து பாலிவுட் சென்று சாதனைகள் புரிந்த சகாப்த்திய நடிகை தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.
தமிழ்நாடே அவரின் தாய்வீடு: கடந்த 100 ஆண்டுகளில் உள்ள நடிகைகளின் பட்டியலை எடுத்தால், அதில் தலைசிறந்த முதல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதேவிதான். திரைத்துறையில் அன்றைய காலகட்டத்திலேயே அதிகளவு வருமானம் ஈட்டும் நடிகைகளில் முதல் நடிகையாக இருந்தவரும் இவரே. இன்றுள்ள பல இளம் நடிகைகளில் பெரும்பாலானோர் ஸ்ரீதேவியை தங்களின் ரோல் மாடலாக கொண்டு நடிக்க வந்து சாதனை புரிந்தவர்கள் ஆவார்கள். உலகளவிலும், இந்திய அளவிலும் பல விருதுகளை குவித்து சாதனை புரிந்த ஸ்ரீதேவி தமிழகத்தில் பிறந்தார் என்பது நமக்கு பெருமைதானே.