ஆகஸ்ட் 18, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை பகுதியை சேர்ந்த 46 வயதான நபர், தனது வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தன்னிடம் டியூஷனில் படித்த 9 வயது மாணவியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்து வந்துள்ளார். BREAKING: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் சோகம்.. தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் துடிதுடிக்க பலி.!
மாணவிக்கு பாலியல் தொல்லை:
இதனிடையே, மாணவி படிக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு, சிறுவர்கள் நல அமைப்பின் சார்பில் கவுன்சலிங் நடைபெற்றது. அப்போது, அந்த மாணவி டியூஷன் ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து, காவல்நிலையத்தில் சிறுவர்கள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூஷன் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3