செப்டம்பர் 27, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனேயில் (Pune) 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் 4 வெவ்வேறு நபர்களுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் 4 பேரும் இந்த சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் முதம் செப்டம்பர் மாதம் வரை பலமுறை பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளனர். மேலும், இதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். 9-Year-Old Girl Rape: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. முதியவர் போக்சோவில் கைது..!
இதனால் பள்ளியில் சிறுமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த சக தோழி இதுகுறித்து விசாரிக்கையில் முழு விவரம் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், சம்மந்தபட்ட சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் பிறகு, சிறுமியை பாலியல் பலாத்காரம் (Rape) செய்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு வழிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இரண்டு 16 வயது சிறுவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் இடையே முதன்மையான நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.