ஏப்ரல் 27, புதுடெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் உள்ள சத்தார்பூர் நகரில், உகாண்டா நாட்டை சேர்ந்த 27 வயது இளம்பெண் (Ugandan Young girl) ஒருவர் பூல் மண்டி பகுதியில் இருந்து சத்தார்பூரில் உள்ள பஹாரி பகுதியை நோக்கி, இரவில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு வாலிபர்கள் அவரிடன் அத்துமீறியுள்ளனர். அவரை தாக்கி ஆடைகளை கிழித்து, அவரிடன் இருந்த பையை பறித்து சென்றுள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணின் தலையில் கல்லால் அடித்து தப்பி ஓடியுள்ளனர். 20 Years Imprisonment To Grocery Shop Owner: 14 வயது சிறுமி கர்ப்பம்; மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை..!

இதுகுறித்து அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்த விசாரணையில், அந்த இளம்பெண் 100 அடி சாலையில் சென்றுள்ளார். அதே சாலையில் நாயுடன் வந்த இரண்டு வாலிபர்கள் இளம்பெண்ணை வழிமறித்து, சுவருக்கு அந்த பகுதியில் இழுத்து சென்று அவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அவரை தாக்கி கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் தெரியவந்தது.

இதுதொடர்பாக, மெஹ்ராவ்லி காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கின்னு மற்றும் ரிங்கு காஷ்யப் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் சத்பாரி கிராமத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவரும் மது போதைக்கு அடிமையானவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.