ஜூன் 12, கண்ணாவரம் (Andhra Pradesh News): 2024 ஆந்திர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான ஆட்சி, 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆந்திராவில் அமைகிறது. இதன் வாயிலாக சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu), 4வது முறையாக முதல்வராக இன்று பொறுப்பேற்றார். மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, பவன் கல்யாணின் (Pawan Kalyan) ஜனசேனா கட்சி மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். ஆந்திர அமைச்சரவையில், பாஜக, ஜனசேனா கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரஜினிகாந்த், மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா (Amit Shah), நிதின் கட்கரி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அமித் ஷா அறிவுரை:
இதனிடையே, முன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் (Tamilisai Soundararajan) இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், அமித் ஷா மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்தபடி நடந்தார். அச்சமயம் அவரை அழைத்த அமித் ஷா, கண்டிப்புடன் அறிவுரையை கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அமித் ஷா என்ன அறிவுரை கூறினார்? என்பது தெரியவில்லை. BJP MP Suresh Gopi Offers Prayers in Tali Maha Shiva Kshetram: மத்திய அமைச்சர் பதவி; பயபக்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் நடிகர் சுரேஷ் கோபி.!
சர்ச்சை கண்டிப்புக்கு நெட்டிசன்கள் கூறும் காரணம்:
அதாவது, கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது, அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி தோல்வியை அடைந்தார். அச்சமயம், அதிமுகவை சேர்ந்த எஸ்.பி வேலுமணி, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரம் குறித்த கருத்துக்களை முன்வைத்து இருந்தார். இது மீண்டும் அதிமுக - பாஜக இடையே காரசார விவாதங்களை ஏற்படுத்தியது. அண்ணாமலையும் எஸ்.பி வேலுமணியின் பல்வேறு கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் பதில் அளித்து இருந்தார். இதனிடையே, தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணாமலையின் கருத்துக்கள் சிலவற்றுக்கு எதிராக தனது சொந்த கருத்தை பதிவு செய்திருந்தார். இது தமிழக பாஜகவில் அண்ணாமலை - தமிழிசை இடையே கருத்து முரண் இருப்பதாக விவாதங்களை கிளப்பியது. இந்த விஷயம் குறித்தே அமித் ஷா தமிழிசையை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது கண்டித்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், தமிழிசை மற்றும் அண்ணாமலை தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே, அமித் ஷா கண்டித்ததன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
#WATCH | Former Telangana Governor Tamilisai Soundararajan attends the swearing-in ceremony of TDP chief & Andhra Pradesh CM-designate N Chandrababu Naidu, in Vijayawada. pic.twitter.com/BC3YB1y4cX
— ANI (@ANI) June 12, 2024