ஏப்ரல் 01, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், லோனி, முஸ்தாபாத் காலனி பகுதியை சேர்ந்தவர் அயூப். இவரின் மனைவி பர்ஸானா. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாக ஆண், பெண் என 5 குழந்தைகள் இருக்கின்றனர்.
மனைவியின் மீது சந்தேகம்: இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு (Wife Killed by Husband With Shovel) அயூப் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம் பர்ஸானா செல்போனில் மும்மரமாக எதனையோ பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவருடன் பேசி வருவதாக சந்தேகப்பட்ட அயூப் மனைவியை தாக்கி இருக்கிறார்.
குழந்தைகள் கண்முன் சோகம்: மேலும், 4 குழந்தைகள் வீட்டில் இருந்தபோது, அவர்களின் கண்முன்னே மனைவியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். தாய் துடிப்பதை கண்டு குழந்தைகள் தந்தையை நிறுத்த முயற்சித்தபோது, அவர்களில் இருவரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின் அயூப் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். CSK Vs DC Highlights: வின்டேஜ் தோனி வந்தும் வெற்றி வரலையேப்பா.. வெறித்தனமான ரசிகர்களின் உற்சாகத்துடன் தோல்வியடைந்த சென்னை அணி..!
காவல்துறையினர் விசாரணை: செய்வதறியாது தவித்த குழந்தைகள் தாயின் உடலை பார்த்தவாறு அழுதுகொண்டு இருக்க, வெளியே சென்ற மூத்த மகன் வீட்டிற்கு திரும்பி தாயின் சடலத்தை கண்டு அதிர்ந்துபோயுள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பர்ஸானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அயூப்-க்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.