Uttarakhand Flood (Photo Credit : @vani_mehrotra X)

ஆகஸ்ட் 05, உத்தரகாசி (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் கிர் கங்கா என்ற பகுதியில் இன்று மேக வெடிப்பு காரணமாக திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் பெரு வெள்ளத்தின் நீர் சூழ்ந்து கொண்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலரும் மாயமாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக வெடிப்பால் பெரு வெள்ளம் :

மேலும் வெள்ளம் சூழ்ந்து கட்டிடங்கள் மீது அதிவேகமாக பாயும் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. பொதுவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழை என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழை உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு (Uttarakhand Rain) செல்லும்போது மேகத்தில் உள்ள மொத்த நீரையும் திடீரென விடுவித்து பெருமழை ஏற்படுகிறது. பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த பயங்கரம்.. இந்துத்துவ கும்பல் அட்டூழியம்.! 

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் :

இதனால் அங்கு ஆற்றங்கரையோரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனிடையே தற்போது மீண்டும் கரையோர கட்டிடங்களை அடித்து செல்லும் வகையில் காட்டாற்று பெருவள்ளம் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவரும் நிலையில், மீட்பு படையினர் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாசி கிர் கங்காவில் மக்கள் அச்சத்தில் கதறும் வீடியோ :