![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/01/Vande-Bharat-Train-Act-as-DustPIn-Photo-Credit-Awanish-Sharan-380x214.jpg)
ஜனவரி 30: இந்தியாவின் இரயில்வே (Indian Railways) துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் பொருட்டும், மக்களுக்கு விரைவான சேவையை வழங்கி, அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு செமி புல்லட் இரயில்களான வந்தே பாரத் (Vande Bharat Train) இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
பல தொலைதூர பயங்களையும், முக்கிய நகரங்களையும் இணைத்து முதற்கட்டமாக வந்தே பாரத் இரயில்கள் தனது பணியை தொடங்கி சிறப்பாக செய்து வருகிறது. அதனை நிர்வகிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. India Women Cricket U19 Team: இந்திய U19 மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு.!
வந்தே பாரத் இரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப் கட்டுமான தலத்தில் (Chennai ICF Coach Factory) கட்டப்பட்டவை ஆகும். அரசு என்னதான் பல திட்டங்களை வகுத்து முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தாலும், அதனை சரியான வகையில் உபயோகம் செய்ய வேண்டியது அதனை பயன்படுத்துவோரின் கடமை ஆகும்.
நமது மக்களில் பெரும்பாலானோர் அலட்சியத்தால் எதையும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. இந்நிலையில், வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்த பயணிகள், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடாமல் அப்படியே விட்டு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
எப்படி நமது வீட்டை நாம் தூய்மையாக வைத்திருக்கிறோமோ அதனைபோலவே நாம் பயணிக்கும் இடங்களும் கூட. அதனை அழகாக பராமரிப்பதில் நமது கடமையும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
நம் இந்தியா, நம் வீடு, நம் தூய்மை.
“We The People.”
Pic: Vande Bharat Express pic.twitter.com/r1K6Yv0XIa
— Awanish Sharan (@AwanishSharan) January 28, 2023
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 30, 2023 08:47 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).