ஜூலை 31, வயநாடு (Kerala News): கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 3 பெரிய நிலச்சரிவுகள் (Kerala Landslide) ஏற்பட்டது. வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், பலரை தேடும் பணிகள் தொடர்ந்து 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. Wayanad Landslide Tamil People Death: வயநாடு கடும் நிலச்சரிவு; ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு..!
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை கண்டு மனிதர்கள் தவிப்பது போலவே, நிலச்சரிவில் தொலைத்த தனது உறவுகளை நாய் (Dog) ஒன்று தேடி அலையும் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளதிதில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
#JUSTIN நிலச்சரிவில் தொலைத்த உறவுகளைத் தேடி அலையும் ஓர் உயிர்#Kerala #Landslide #Wayanad #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/yXZtFA0yuZ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 31, 2024