
பிப்ரவரி 14, கோழிக்கோடு (Kerala News): உத்தர பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா (Maha Kumbh Mela), கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்வில் பாசி மணிகள் விற்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான மோனி போஸ்லே (Monalisa Bhosle) என்ற பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
வைரல் பெண் "மோனாலிசா":
அவரது தோற்றம் மற்றும் கண்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனால் 'காந்தக் கண்ணழகி' என்றும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர். இந்நிலையில், அவரது தோற்றத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தனது புதுப் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புவதாகவும், அதற்காக அவரை அழைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
நகைக் கடை திறப்பு:
இந்நிலையில், மகா கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா' (Monalisa) என்றும் அழைக்கப்படும் மோனி போஸ்லே, இன்று (பிப்ரவரி 14) கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு (Kozhikode) நகருக்குச் சென்றார். அங்கு தொழிலதிபர் பாபி செம்மனூருக்குச் சொந்தமான நகைக் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பிறகு, தன்னை காண வந்த ரசிகர்களுடன் மோனாலிசா, ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் பேசினார். இதனையடுத்து, தொழிலதிபர் பாபி செம்மனூர், மோனாலிசாவிற்கு நெக்லஸ் அணிவித்தார். தற்போது, இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
View this post on Instagram
மோனாலிசாவிற்கு நெக்லஸ் அணிவித்த பாபி செம்மனூர்: