
மார்ச் 03, ராம்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் (Rampur) பிப்ரவரி 28ஆம் தேதி திருமண விழா ஒன்று நடைபெற்றது. அப்போது, மணமகன் சுபாஷ் குமார், மணமகளிடம் கார் எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு, மணமகள், ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததால், கார் இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது வருங்கால மனைவியை மணமேடையில் ஓங்கி அறைந்தார். இதனால் அவர், மயக்கமடைந்து கீழே விழுந்தார். Woman Abuse Case: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு..!
திருமண நிகழ்வில் கலவரம்:
இதனைத் தொடர்ந்து, இரு வீட்டார் உறவினர்களுக்கிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரைக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனிடையே, மணமகன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தகராறில் காயமடைந்த 6 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, மணமகன் சுபாஷ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். திருமணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்த போதிலும், மணமகள் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.