
மே 16, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கனோஜ் மாவட்டத்தில் பகதூர்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திர குமார். ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி மாயா தேவி (50). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், பீகாரில் உள்ள பக்சர் ரயில் நிலையத்திலிருந்து மகளை அழைத்துச் செல்ல தனது கணவர் புறப்பட்டுச் சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனவும் கடந்த மே 10ஆம் தேதி மாயா தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..!
போலீஸ் விசாரணை:
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தேவேந்திர குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, புகார் கொடுத்த மாயா தேவியிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாயா தேவிக்கும், அனில் யாதவ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தங்களது உறவில் கணவர் இடையூறாக இருப்பதால், கணவரை கொலை (Murder) செய்ய திட்டமிட்டார்.
கணவர் கொலை:
அதன்படி, காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி ஆற்றங்கரையில் வீசியுள்ளார். இதனையடுத்து, ஆற்றங்கரையில் வீசப்பட்ட தேவேந்திர குமாரின் உடலை ஒவ்வொன்றாக தேடி வருகின்றனர். இதில், துண்டிக்கப்பட்ட கை,கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு அருகில் உள்ள கிணற்றில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனிடையே மாயா தேவி, அனில் யாதவ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.