Bihar Dowry Case (Photo Credit @TheTrueDart / @DinamaniDaily X)

ஜூன் 11, முசாபர்பூர் (Bihar News): இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது நெடுங்காலமாக நீடித்து வருகிறது. இந்த விஷயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தும் வரதட்சணையாக பணம், நகைகளை மணமகன் வீட்டார் கேட்டு பெறுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வரதட்சணையாக பைக், பணம், கார், நகை போன்றவற்றுக்கு மேலாக உன் கணவருக்கு சிறுநீரகத்தையே தானமாக வழங்க வேண்டும் என மாமியார் வற்புறுத்தியதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. Health Tips: இந்த அறிகுறியெல்லாம் இருக்கா?.. பெரிய ஆப்பு.. உடனே செக் பண்ணுங்க.! 

வரதட்சணை கொடுமை செய்த மாமியார் :

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் இந்த அதிர்ச்சி தரும் புகாரை வழங்கி இருக்கிறார். இது குறித்த புகாரில், "கடந்த 2021 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் முடிந்தது. திருமண முதலாகவே எனது மாமியார் என்னை பலவகையில் துன்புறுத்தி வந்தார். இதனிடையே எனது கணவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், நீ வரதட்சணைக்கு பதில் உனது சிறுநீரகத்தை தானமாக வழங்க வேண்டும் எனவும் மாமியார் கட்டாயப்படுத்தி வருகிறார்.

வாழ விட மாட்டோம் என மிரட்டல் :

மேலும் தானம் செய்ய மறுத்தால் உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டோம் என்றும் கொடுமை செய்கிறார்" எனக் கூறியுள்ளார். இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் தீப்தியின் கணவர், அவரது மாமியார் உட்பட குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.