Women Self Empowerment

டிசம்பர், 15: சிறுதொழில் (Small Scale Industries) என்பது அதிக இலாபம் இல்லாத, குறைந்த வருவாயை வழங்கும் தொழிலாகும். இதன் இலாபம் என்பது சிறுகச்சிறுகவே அதிகரிக்கும். நமது சக்திக்கு ஏற்றாற்போல இருக்கும் சிறுதொழிலில் முதலீடு செய்து விருப்பம் கொண்ட தொழிலினை தேர்வு செய்துகொள்ளலாம்.

நமது நாட்டினை பொறுத்த வரையில் சிறுதொழில்களுக்கு பஞ்சம் என்பது இல்லை. சுயதொழிலில் இலாபம் என்பது பொருட்களின் தரம், சேவையின் நிலைப்புத்தன்மை, வாடிக்கையாளரை கனிவுடன் கவனித்தல், அமைதியாக பேசுதல் என இலாபம் அதிகரிக்கும். இதில் உங்களுக்கான சிறுதொழிலை நீங்களே தேர்வு செய்யலாம்.

இன்றளவில் பெண்களின் (Women Empowerment) வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தொழில் தொடங்கவும், வருவாய் ஈட்டவும் அரசு பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பெண்கள் சுயதொழிலை ஊக்குவிக்க திட்டங்கள் உள்ளன. அவ்வாறான ஆலோசனை கூட்டங்கள் நடந்தால் கலந்துகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம். Spicy Food Tears: காரமான உணவை சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் வருவது ஏன் தெரியுமா?.. அசத்தல் உண்மை இதோ.! 

சிறுதொழில்:

  1. மசால் பொடி தயாரிப்பு,
  2. ஊறுகாய் தயாரிப்பு,
  3. பிஸ்கட் & பன் தயாரிப்பு,
  4. ஜாம் தயாரிப்பு,
  5. சிப்ஸ் தயாரிப்பு,
  6. அப்பளம் & வத்தல் தயாரிப்பு,
  7. மிக்சர், சேவு, சீவல் சிற்றுண்டி தயாரிப்பு,
  8. சிறிய உணவகம்,
  9. தேநீர் கடை,
  10. ஜூஸ் கடை,
  11. சிற்றுண்டி விற்பனை கடை,
  12. இட்லி & தோசை மாவு விற்பனை.

விற்பனை தொழில்கள்:

  1. பெண்களுக்கான சேலை, ஜாக்கெட் ஆடை விற்பனை
  2. சிறிய பாத்திரங்கள் விற்பனை,
  3. அழகு சாதன பொருள்கள் விற்பனை,
  4. கைக்கடிகாரம் & பெல்ட் விற்பனை,
  5. வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை,
  6. பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை,
  7. பழம் விற்பனை,
  8. காய்கறி விற்பனை & அலுவலகத்திற்கு எழுதுபொருள் விற்பனை.

பண்ணை தொழில்கள்:

  1. முயல் வளர்ப்பு,
  2. கோழி & காடை வளர்ப்பு,
  3. தேனீ வளர்ப்பு, ஆடு வளர்ப்பு (ஒரு ஜோடி ஆண்டு வாங்கி தொழிலை தொடங்கலாம்). பண்ணை தொழில்களை பொறுத்தமட்டில் அதற்கான சிறு அனுபவத்தை கண்டுகொண்டு அதனை தேர்வு செய்து நீங்கள் தொழிலை தொடங்கலாம்.

சிறுதொழிலை தேர்வு செய்ததும் அதற்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனைப்போல, தொழிலுக்கான கருவிகளின் முதலீடுகளை ஈர்த்தல், அதனை எளிய முறைகளில் பெறுதல் என்று ஒவ்வொரு பணிகளையும் அடிமேலடியெடுத்து விழிப்புடன் வைக்க வேண்டும். உங்களின் சுயதொழிலுக்கு நீங்களே முதலாளி என்பதால் உடல்நலத்தையும், தொழில் நலத்தையும் ஒருசேர கவனிக்க வேண்டும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 04:27 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).