Respective: Mount Everest

டிசம்பர், 9: உலகம் முழுவதும் அந்தந்த நிலப்பரப்புகளை கொண்டுள்ள நாடுகளில் பல மலைச்சிகரமும் (Mountains) அமைந்துள்ளது. இவற்றில் சில மக்கள் வாழக்கூடிய இடங்கள் இன்ப சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இன்று உலகளவில் உயரமான சிகரம் தொடர்பான தகவலை காணலாம்.

எவரெஸ்ட் சிகரம் (Mount Everest): கடல் மட்டத்தில் இருந்து 8,848.86 மீட்டர் (29,031.7 அடி) உயரத்தில் நேபாள நாட்டில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் உலகின் உயரமான மலைச்சிகரங்களில் முதன்மையானது ஆகும். எவரெஸ்ட் சிகரத்தை அடையவும், அதன் மீது ஏறி தங்களின் திறமையை காண்பிக்கவும் ஆபத்தான சாகசங்கள் செய்ய பல மலையேற்றம் செய்யும் வீரர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து குவிவது வழக்கம்.

கே2 காட்வின் ஆஸ்டின் சிகரம் (K2 Mount Godwin Austen): கடல் மட்டத்தில் இருந்து 8,611 மீட்டர் (28,251 அடி) உயரத்தில் இருக்கும் கட்டவினாஸ்டின் சிகரம் பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ளது. வடக்கு பாகிஸ்தான் பகுதியில் கே2 சிகரம் அமைந்துள்ளது.

Mount K2Mount K2

கங்கிச்சேன்ஜூங்கா (Kangchenjunga): கடல் மட்டத்தில் இருந்து 8,586 மீட்டர்  (28,169 அடி) உயரத்தில் அமைந்துள்ள கங்கிச்சேன்ஜூங்கா  மலைச்சிகரம் நேபாளம் - சிக்கிம் எல்லையில் இந்தியாவில் அமைந்துள்ளது. இந்த மலைச்சிகரம் 5 பாகங்களாக பிரிக்கப்பட்டு அவற்றில் 2 நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பிற 3 பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

லஹோட்ஸ் (Lhotse): கடல் மட்டத்தில் இருந்து 8,516 மீட்டர் (27,940 அடி) உயரத்தில் அமைந்துள்ள லஹோட்ஸ் சிகரம், உலகின் நான்காவது உயர்ந்த மலைச்சிகரம் ஆகும். இது நேபாளம் நாட்டின் க்ஹும்பு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. Premature Babies: குறைபிரசவத்தில் பிறந்து இறக்கும் குழந்தைகள்.. காரணமும், தீர்வும் என்ன?..! 

மக்களு (Makalu): கடல் மட்டத்தில் இருந்து 8,463 மீட்டர் (27,766 அடி) உயரத்தில் அமைந்துள்ள மக்களு சிகரம், இமயமலைத்தொடரில் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.

Mount Makalu Mount Makalu

சோ ஆயு (Cho Oyu): கடல் மட்டத்தில் இருந்து 8,188 மீட்டர் (26,864 அடி) உயரத்தில் அமைந்துள்ள Cho Oyu சிகரம், இமயமலைத்தொடரில் சீன - நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தவுலகிரி (Dhaulagiri): கடல் மட்டத்தில் இருந்து 8,167 மீட்டர் (26,795 அடி) உயரத்தில் அமைந்துள்ள தவுலகிரி சிகரம், நேபாளத்தில் தொடங்கி அந்நாட்டின் எல்லைக்குள்ளேயே முடியும் சிகரம் ஆகும்.

மேற்கூறிய மலைச்சிகரங்கள் உலகளவில் உயரமான இடத்தில் அமைந்துள்ள சிகரத்தின் பட்டியல் ஆகும். இவை பெரும்பாலும் இமயமலையை சுற்றியே அமைந்திருக்கும். கண்டங்களின் விபரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆசிய கண்டத்தில் எவரெஸ்ட் சிகரம்  8,848.86 அடி உயரத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் அகோன்சிகுவா மலைச்சிகரம் 6,962 மீட்டர் உயரத்திலும், வடக்கு அமெரிக்காவின் அலாஸ்கா டேனாலி சிகரம் 6,190 மீட்டர் உயரத்திலும், ஆப்பிரிக்காவில் உள்ள தன்ஜானியா கிளிமஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டர் உயரத்திலும், அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மலைச்சிகரம் 4,892 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).