அக்டோபர் 30, சென்னை (Festival News): இந்தியாவில் உள்ள பல பகுதிகளிலும் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி (Diwali Festival 2024) ஆகும். இந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி வருகிறது. தீபாவளி (Deepavali) பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் நண்பர்கள் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள் மற்றும் பல வகையான உணவுகளை சாப்பிட்டு கொண்டாடி மகிழ்வர். தீபாவளி (Diwali) அன்று விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். காலை எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து, விளக்கேற்றி பூஜை செய்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளி சிறப்பாக கொண்டாடுவார்கள். Diwali 2024: களைகட்டும் தீபாவளி 2024 கொண்டாட்டம்; அரசின் சார்பில் முக்கிய அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். இதனை கங்கா ஸ்நானம் (Ganga Bath) என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்நாளில் எந்த நீர்நிலைகளில் குளித்தாலும், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில், அதிகாலை 3.30 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. தீபாவளி அன்று சூரிய உதயமாவதற்குள் குளிப்பது சிறப்பானதாகும்.