அக்டோபர் 30, தலைமை செயலகம் (Chennai News): 2024 தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்று ஒருநாட்களே எஞ்சியுள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் தீபாவளி (Deepawali 2024) கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளனர். சென்னை நகரமே இதனால் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களை இணைக்கும் சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூர், சென்னை - ஆந்திரா வழித்தட சாலைகள் அதிக போக்குவரத்தை எதிர்கொண்டுள்ளது. Diwali 2024 Date & Good Time: தீபாவளி தேதி குழப்பம்.. 2024 தீபாவளி எப்போது..? முழு விவரம் உள்ளே..!
மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுகோள்:
இந்நிலையில், விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும், சென்னை பெருநகர மாநகராட்சி சார்பிலும் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், பாதுகாப்பாக பொதுமக்கள் குறைந்த ஒலியினுடனும், குறைந்த அளவில் காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாக்களை வெடிக்க வேண்டும். Diwali 2024 Wishes: "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" உங்களின் அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளைப் பகிருங்க.!
குடிசைப்பகுதியில் வெடி வேண்டாம்:
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.