
பிப்ரவரி 14, சென்னை (Festival News): உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentine's Day) பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி முதலே இதன் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள், தங்கள் துணைக்கு ஏதாவது பரிசுகளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என நினைக்கின்றனர். பரிசுகள் பொதுவாக அன்பை வெளிப்படுத்த உதவும். காதலர் தினம் (Lover's Day) என்றால் முதலில் நினைவுக்கு வருவது ரோஜா பூ, சாக்லேட், டெடி பியர் இவைகள் தான். மேலும், காதலை வலுப்படுத்த, அழகான இடங்களுக்கு அழைத்து சென்று, உங்கள் காதலரின் (Valentines Day Wishes) விருப்பத்திற்கு ஏற்ப பரிசுகளை வாங்கி கொடுங்கள். இப்பதிவில் காதலர் தினத்தன்று உங்கள் காதலருக்கு தமிழில் வாழ்த்து (Valentine's Day Wishes in Tamil) அனுப்புவதற்கு ஏற்ற அன்பான காதலர் தின வாழ்த்து செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கள் துணைக்கு காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். Valentine's Day Gifts & Travel Ideas: காதலர் தினத்தன்று செல்ல வேண்டிய அழகான இடங்களும், பரிசுப் பொருட்களும்.. முழு விவரம் இதோ..!
காதலர் தின வாழ்த்துக்கள் 2025:
1. என் அன்பு காதலுக்கு
காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

2. உன் சிறுத்துளி நினைவு போதுமென்
அகம் முகம் மகிழ..! என் அன்பே!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

3. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம்
உன்னிடம் மட்டும் எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு
மௌனமாய் நிற்கிறது..! காதலர் தின வாழ்த்துக்கள்!

4. தொலைவேன் என்று தெரியும் - ஆனால்
உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று
நினைக்கவில்லை..! காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

5. என் இதயத்தைக் கொள்ளையடித்த
என் காதலுக்கு இனிய காதலர் தின வாழ்த்துகள்!

6. காதல் ஒரு வார்த்தை அல்ல, அது என் வாழ்வின் மூச்சு!
என் உயிருக்கு
காதலர் தின வாழ்த்துகள்!

7. உனக்காக உன்னோடு தொடங்கிய என் வாழ்க்கை
உன் கைகோர்த்து உன்னோடே முடிய விரும்புகிறேன்!
என் காதலுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..!

8. முடிவே இல்லாத காதலும்
பிரிவே இல்லாத வாழ்வும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்..!
என் அன்புக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

9. குடைக்குள் இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்!
காதலர் தின வாழ்த்துக்கள்..!

10. கல்யாணம் முடியும் வரை
வருவதல்ல காதல்
கண்மூடி சாகும் வரை இருப்பதே காதல்..!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வழியாக தெரிவித்துக்கொள்கிறோம்.