Valentine's Day Gifts and Travel Ideas (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 13, சென்னை (Festival News): உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentine's Day) பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி முதலே இதன் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். காதலர்கள், காதலை தெரிவிக்க நினைப்பவர்கள், திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என அனைவரும் தங்கள் துணைக்கு ஏதாவது பரிசுகளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என நினைக்கின்றனர். பரிசுகள் பொதுவாக அன்பை வெளிப்படுத்த உதவும். காதலர் தினம் (Lover's Day) என்றால் முதலில் நினைவுக்கு வருவது ரோஜா பூ, சாக்லேட், டெடி பியர் இவைகளை பரிசளிப்பது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் உங்கள் அன்பை, காதலை, உறவை வலுப்படுத்த விரும்பினால், புதுவிதமான பரிசுகளை வாங்கி கொடுக்கும் போது, அது உறவில் இனிமையைக் கொண்டு வருவதோடு, உறவுகளையும் வலுப்படுத்தும். மேலும், காதலை வலுப்படுத்த, அழகான இடங்களுக்கு அழைத்து சென்று, உங்கள் காதலரின் (Valentines Day Wishes) விருப்பத்திற்கு ஏற்ப பரிசுகளை வாங்கி கொடுங்கள். அந்தவகையில், காதலர் தினத்தன்று செல்ல வேண்டிய அழகான இடங்களும், காதலர் தின பரிசுப் பொருட்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். Happy Hug Day 2025: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!

காதலர் தினத்தன்று செல்ல வேண்டிய இடங்கள்:

ஊட்டி:

ஊட்டி (Ooty), இயற்கை எழில்மிகுந்த அழகான மலைப்பிரதேசம் ஆகும். அற்புதமான சூழல்கள், இனிமையான வானிலை, பறவைகளின் சத்தங்கள், அழகிய காட்சிகள் மற்றும் குளிர்ந்த காற்று அனைத்தும் சேர்ந்து காதல் பண்டிகையைக் கொண்டாட சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு அழகான அனுபவத்திற்காக இங்கு செல்லலாம்.

ஆலப்புழா:

கேரள மாநிலத்தில் ஆலப்புழா (Alleppey) அமைந்துள்ளது. இயற்கை அழகைத் தவிர, அற்புதமான சுற்றுலாத் தலமானது உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல மாற்றும். இந்த இடம் அனைத்து காதல் ஜோடிகளுக்கும் ஏற்றது என்றாலும், பச்சை வயல்கள், பனை மரங்கள் நிறைந்த கால்வாய்கள், மறுபுறம் படகு வீடுகளின் தாளம், அனைவராலும் போற்றப்படுகிறது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ சிறந்த தேர்வாக அமையும்.

கோவா:

இந்தியாவின் சிறந்த காதலர் தின இடங்களில் கோவா (Goa) முக்கியத்துவம் பெறுகிறது. கோவா கடற்கரைகளில் கடல், சூரியன் மற்றும் மணல் உங்கள் காதலை இன்னும் வலுப்படுத்தும். தங்கள் காதலர்களுடன் நீண்ட நேரத்தை செலவிட விரும்பும் காதலர்களுக்கு தனியார் கடற்கரைகள் உள்ளன. இந்தியாவின் லாஸ் வேகாஸ் என்று கருதப்படும் இது, இரவு விடுதிகள், கேசினோக்கள், உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளால் முழுமையாக நிரம்பியுள்ளது. காதலை அழகான நினைவுகளுடன் பகிர்ந்து கொள்ள இது சிறந்த இடமாகும்.

காதலர் தின பரிசுப் பொருட்கள்:

  • காதலன், தனது காதலிக்கு அழகான மோதிரம், நெக்லஸ், செயின் இவைகளை வாங்கி கொடுக்கலாம். ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டில் டின்னருக்கு அழைத்துச் செல்லலாம். பெர்ஃப்யூம், மேக்கப் பாக்ஸ், ஜாக்கெட் இவைகளை காதலர் தின பரிசாக (Valentine's Day Gifts) கொடுக்கலாம். இதன் மூலம் உறவு இன்னும் ஆழமாகும்.
  • காதலி, தனது காதலனுக்கு ஸ்மார்ட் வாட்ச், காலணிகள், கேஜெட்டுகள் இவைகளை பரிசாக கொடுத்து அசத்தலாம். அவர்களுக்கு பிரேஸ்லெட், பேண்ட், ஷர்ட், ஷூ, டை, வாட்ச் இவைகளை காதலர் தின பரிசாக கொடுக்கலாம். இது இருவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்கும்.
  • பெர்ஃப்யூம், பர்ஸ், லெதர் பெல்ட், ஷூ, புதிய கலெக்ஷன் ஷர்ட், ஜாக்கெட் இவற்றில் ஏதாவது ஒன்றை பரிசாக வழக்லாம். இதன் மூலம் உங்கள் உறவு மேலும் வலுப்படும்.
  • காதலர் தின பரிசாக அவர்களை கோயில் போன்ற புனிதமான ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் இருவருக்கும் இடையேயான சந்தோஷம் அதிகரிக்கும். இத்துடன் டிராவல் பேக், வாட்ச் மற்றும் ஆடைகளை பரிசாகவும் வழங்கலாம்.
  • ஒரு பழக்கூடையுடன் மொபைல் போன், லேப்டாப், எலக்ட்ரானிக் டைரிகளை காதலர் தின பரிசாக வழங்கலாம். மேக்கப் பாக்ஸ், எலக்ட்ரானிக் கேஜெட், நெக்லேஸ், தங்க மோதிரத்தை காதலர் தின சிறப்பு பரிசாக வழங்கினால் புன்னகையுடன் உறவு நீடிக்கும்.