டிசம்பர் 20, சென்னை (Chennai News): நமது வாயில் இயற்கையாக ஊரும் உமிழ்நீர் (Salivary Benefits), எச்சில் எனவும் அழைக்கப்படுகிறது. எச்சில் உணவு செரிமானத்திற்கு, வாயின் உட்பகுதியையும், தொண்டைக் குழிப்பகுதியையும் ஈர்ப்பதானமான தன்மையுடன் வைக்கிறது. மனித உடலில் இருக்கும் நவ துவாரம் என அழைக்கப்படும் ஒன்பது வாசலில் வாயும் முக்கியமான ஒன்றாகும். உணவை உண்ணவும், பேசவும் வாய் பிரதானமாக பயன்படுகிறது. உமிழ்நீரின் (Umilneer) பயனை அறிந்தே சித்தர்கள் "உமிழ்நீரை வெளியில் துப்பல் ஆகாது" என கூறினார்.
உணவும் - இனிப்பும்:
சுவைகளில் பலரும் பிடித்தமான புளிப்பு, இனிப்பு போன்றவற்றை மூக்கு உணர்ந்தாலே உமிழ்நீர் (Umilnir) வாயில் இயல்பாக சுரக்க ஆரம்பித்துவிடும். அதேநேரத்தில், உடலுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் (Saliva) சுரக்கும். இதனால் தான் இனிப்பு நமது பண்டைய உணவு முறைகளில் முதலாக இருந்தது. உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவி செய்கிறது. சமபந்தி விருந்துகளில் முதலில் வைக்கப்பட்ட இனிப்பு தான், இன்று டெசர்ட் என்ற பெயரில் இறுதிக்கு வந்துவிட்டது.
உமிழ்நீர் சுரப்பிகள்:
நமது உடலில் பரோடிட், சப்மாண்டிபுலர், சப்லிங்குவில் என 3 சுரப்பிக (Salivary Glands)இருக்கின்றன. இதில் பரோடிட் காதுகளுக்கு கீழ் பகுதியில் இருக்கும். இதன் நாலாம் வழியே கன்னத்தின் உட்புறம், இரண்டு கதவை பற்களுக்கு மேல் சுரப்பிகள் துவாரங்கள் உள்ளது. இந்த நாளெம் மனித உடலில் வறட்சி ஏற்படும்போது அதிகம் சுரந்து வறட்சியை சரி செய்யவும். ப்ரோடிட் சுரப்பிகளுக்கு கீழே இருக்கும் சப்மாண்டிபுலர் சுரப்பி, நாக்கின் அடிப்பகுதியில் துவாரங்களை கொண்டு அமைந்துள்ளது. கன்னத்தின் கீழே இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ள சப்லிங்குவில் சுரப்பி, வாய் முழுவதும் துவாரங்களை கொண்டுள்ளது.
உமிழ்நீர் தன்மை:
நமது உடலில் சுரக்கும் உமிழ்நீரானது காரத்தன்மையை இயற்கையாக கொண்டது. இதில் அதிக என்சைம்கள் இருக்கும். ஆண்டிபயாடிக் அதிகம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தனி ஒரு மனிதருக்கு சராசரியாக உமிழ் நீர் 1500 மில்லி அளவு சுரக்கும். இந்த உமிழ்நீர் சுரப்பு உணவின் அளவு, சாப்பிடும் நபரின் மனநிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உமிழ்நீரின் முக்கிய பணியாக செரிமானம் கருதப்படுகிறது.
பழமொழி நினைவிருக்கா?
"நொறுங்கத்தின்றால் 100 வயது" என்ற பழமொழி பலருக்கும் மறந்துபோயிருக்கலாம். உணவை நொறுங்க மென்று பொறுமையாக விழுங்கி சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதனால் 100 வயது வரை ஒருவரை வாழலாம் என்பதே அதன் பொருள் ஆகும். ஆனால், இன்றளவில் பணி சூழல், வேலை-கல்வி அவசரம் என தறிகெட்ட உலகில் தடுமாறி வாழுகிறோம். சில நேரம் உணவையும் மறுக்கிறோம். இது நமது ஆயுளை கட்டாயம் குறைக்கும்.
உமிழ்நீரின் பயன்கள்:
நாம் உணவை சாப்பிடும்போது, உமிழ்நீர் உணவுடன் கலந்து இருக்கும். இதனால் உமிழ்நீரில் உள்ள என்சைம் உணவின் நச்சை நீக்கும். பின் உணவுகுழலுக்கு எதுவாக அனுப்பி வைக்கப்படும். உமிழ்நீரில் இருக்கும் நொதி பித்ததுடன் சேர்த்து உணவை சீரணமடைய உதவி செய்யும். அஜீரணம், வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டால், உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்தும். அதேபோல, வாய்ப்புண்களை உமிழ்நீர் முதலில் சரி செய்கிறது. உமிழ்நீரின் அளவு குறைந்தாலும், அதிகம் அடைந்தாலும், கடித்தன்மை அடைந்தாலும் அது நோயின் அல்லது நோய்த்தாக்கத்தின் அறிகுறி ஆகும்.
கூலிப், சைனி உடல்நலனை மெல்லக்கொல்லும் விஷம்:
பாக்கு, புகையிலை, சைனி, கூலிப், கான்ஸ், போயிலை என போதை வஸ்துக்களை, அரசின் தடையையும் மீறி வாங்கி, வாயில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் கொண்டோரின் எண்ணிக்கை இன்றளவில் அதிகரித்துள்ளது. இவ்வாறான போதை வஸ்துக்களை பயன்படுத்தும் நபர்களின் உமிழ்நீருடன், போதைப்பொருட்கள் வினைபுரிந்து விஷமான நீர் உடலை சீர்கெடுக்கும். விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்ப அறிவுறுத்துவார்கள். இதன் காரணம் உமிழ்நீர் விழுங்கப்பட்டால் பசியை தூண்டும் என்பதால் ஆகும். அதனாலேயே விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவது இல்லை.