ஜூலை 30, சென்னை (Festival News): Aadi Perukku Wishes HD Wall Papers for Aadi 18 Wishes in Tamil ஆடி மாதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இதை ஆடி பதினெட்டாம் பெருக்கு (Aadi 18) என்றும் சொல்வர். நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து, பூஜை செய்து வழிபடும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று புதிய தொழில் துவங்குவது, தொழில் விருத்திக்கான முதலீடுகள் செய்வது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நாளில் எதை துவங்கினாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆடிப்பெருக்கு வாழ்த்து செய்திகளை இப்பதிவில் காண்போம். Aadi Perukku 2025: ஆடி 18 நன்னாளில் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம், மாற்றும் முறை இதோ.!
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் (Aadi Perukku Wishes):
சொந்தங்கள் பெருகிட
பந்தங்கள் நெருங்கிட
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்..!

குறையாத செல்வம்
வலிமையான உடல் நலம் பெற
இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்..!

அன்பு நெஞ்சம் கொண்ட
அனைத்து சொந்தங்களுக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

காவிரி நீர் போல்
மகிழ்ச்சி பொங்கிட
ஆடி 18 நல்வாழ்த்துக்கள்..!

அனைவரின் வீட்டிலும்
அன்பு நிறைந்திட
இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

வளமும் செல்வமும்
பெருகட்டும்
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்..!

அளவில்லா அன்பும்
குறைவில்லா செல்வமும்
பெற்று வாழ
இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

கவலை என்னும் இருள் மறைந்து
மகிழ்ச்சி என்னும் ஒளி பெருக
இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்..!

என் இனிய சொந்தங்கள் அனைவருக்கும்
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்..!

அன்பான உள்ளம்
கொண்ட அனைவருக்கும்
இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
இனிய ஆடி 18 வாழ்த்துக்கள்..!

நீர் பெருகுவதை போல
செல்வ வளம் பெருக
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

குறைவில்லா செல்வம் பெருக
ஆடி 18 நல்வாழ்த்துக்கள்..!

குடும்பம் செழிக்க
வாழ்வு வளம்பெற
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

அனைத்து நன்மைகளையும் பெற்று
சிறப்புடன் வாழ
இனிய ஆடி 18 நல்வாழ்த்துக்கள்..!

அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.