Aadi Velli 2025 (Photo Credit: Team LatestLY)

ஜூலை 17, சென்னை (Festival News): தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாடு ஆடி வெள்ளி (Aadi Velli) ஆகும். அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, அருள் பெற வேண்டி வழிபாடு செய்யும் திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் வழிபாடு செய்ய முடியாதவர்கள், ஆடி முதல் வெள்ளியில் பூஜை செய்து வழிபட்டால், அம்பிகையின் அருளை பெற முடியும். Chitra Pournami 2025: சித்ரா பௌர்ணமி 2025; விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்.. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி வெள்ளி:

ஆடி வெள்ளி என்பது மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அனைத்து விதமான செல்வ பலன்களையும் அள்ளித் தரக்கூடிய நாளாக ஆடி முதல் வெள்ளிக்கிழமை அமைந்துள்ளது. பொதுவாகவே, அம்மனின் அருளை பெற வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபடுவர். வெள்ளிக்கிழமை, சுக்கிர பகவானுக்கும் உரிய நாள் என்பதால், இந்நாளில் சுக்கிர ஹோரையில் செய்யப்படும் பரிகாரங்களும் அதிக பலன் தரக் கூடியவை ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி முதல் வெள்ளி:

இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 18ஆம் தேதி வருகிறது. இந்நாளில் அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, விளக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். வீடுகளிலில் விளக்கு ஏற்றி பூஜை செய்து அம்பிகையின் அருளை பெறலாம். விளக்கு பூஜை, குத்துவிளக்கை பயன்படுத்தி செய்வது மிகவும் சிறப்பு. இதனால், முப்பெரும் தேவர்கள் மற்றும் முப்பெரும் தேவியர்களின் அருளை பெற முடியும்.

விளக்கு பூஜை:

ஆடி வெள்ளி அன்று மாலை 6 மணிக்கு பிறகு விளக்கு பூஜை செய்வது நல்லது. வீட்டின் பூஜை அறையில் கோலமிட்டு, வாழை இலை விரித்து, அதற்கு மேல் குத்துவிளக்கு வைக்கும் அளவிற்கு பச்சரிசி அல்லது நெல் பரப்பிக் கொள்ளவும். மேலும், அதன்மீது குத்துவிளக்கு வைத்து, குங்குமம் வைத்து, பூ சுற்றி வைக்கவும். முதலில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து, அதற்கு குங்குமம், அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். பிறகு, அவரவரின் குலதெய்வத்தையும், நவகிரகங்களையும் வணங்க வேண்டும். இதன்பிறகு குத்து விளக்கை ஏற்றி வழிபடுவது சிறப்பு.

2025ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகள்:

  • முதல் ஆடி வெள்ளி - ஜூலை 18
  • 2வது ஆடி வெள்ளி - ஜூலை 25
  • 3வது ஆடி வெள்ளி - ஆகஸ்ட் 01
  • 4வது ஆடி வெள்ளி - ஆகஸ்ட் 08
  • 5வது ஆடி வெள்ளி - ஆகஸ்ட் 15