Chitra Pournami 2025 (Photo Credit: Team LatestLY)

மே 12, திருவண்ணாமலை (Festival News): சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத நாள் சித்ரா பௌர்ணமி (Chitra Pournami) ஆகும். எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து, நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்றிரவு (மே 11) 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பௌர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!

பௌர்ணமி கிரிவலம்:

இதனையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். பஞ்சபூதத் தலங்களுள் இதனை அக்னித் தலம் என்றும், நால்வராலும் பாடப்பட்ட தலம் என்றும் போற்றப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான தம்பதியினர் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள். கிரிவலம் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கமாகும். அதாவது, திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால், கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

சித்ரா பௌர்ணமி சாமி தரிசனம்:

பக்தர்கள், பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷம் என்பதால், 14 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் வழிபடுவார்கள். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி நேற்றிரவு சுமார் 8.53 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தரகள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பௌர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால், பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.

சித்ரா பௌர்ணமி சிறப்புக்கள்:

இந்திரன், பாவ விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ரா பௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ரா பௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.