Sankara Rameswarar Temple Aippasi Thirukalyana Festival in Thoothukudi (Photo Credit: @ANI X)

அக்டோபர் 19, தூத்துக்குடி (Festival News): தூத்துக்குடி மாவட்டம், அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் (Sankara Rameshwarar Temple) ஐப்பசி திருக்கல்யாணம் (Aippasi Thirukalyanam) உற்சவம் நேற்று (அக்டோபர் 18) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறும். அதனைத்தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி (Aippasi) மாதத்தின் முதல் தேதியில் ஐப்பசி திருக்கல்யாணம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..!

இதனை முன்னிட்டு, கொடி மரத்திற்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில், அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் திரளாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா: