ஜூன் 17, சென்னை (Chennai): உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களால் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படும் பண்டிகைகளில் முக்கியமானது பக்ரித் ஈத் (Bakrid Eid). ஹஜ் பெருநாள் என்று வர்ணிக்கப்படும் பக்ரீத் (Eid Ul Adha) பண்டிகையின் போது, இறைவனின் தூதரான இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் வரலாறு சுருக்கமாக:
4000 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் தூதுவர் இப்ராஹிம், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார். பின் இறைவனின் அருளால் இரண்டாவது மனைவி ஆசாரா என்பவரின் மூலம் ஆண் குழந்தை மகனாக பிறந்துள்ளார். இஸ்மாயில் என்று பெயரிட்டு வளர்க்கப்பட்ட அந்த குழந்தையின் வழிவந்தவர்கள் இன்றைய அரேபியர்கள் ஆவார்கள்.
மகன் இஸ்மாயில் தனது பாலியப்பருவத்தை எட்டியபோது, அவரை தனக்கு பலியிட வேண்டும் என்று இப்ராஹிம் கனவில் இறைவன் கட்டளையிட்டு இருக்கிறார். இது குறித்து மகனிடம் இப்ராஹிம் தெரிவித்து, அவரின் அனுமதியுடன் பலியிட ஏற்பாடுகளை செய்துள்ளார். அப்போது, சீப்ரைல் என்ற தூதரை அனுப்பிய இறைவன், பலியிடும் நிகழ்ச்சியை தடுத்து இருக்கிறார். மேலும், ஆட்டை பலியிட கட்டளையிட்டு இருக்கிறார். Vanchinathan Memorial Day: வரலாற்றில் இன்று: வாஞ்சிநாதன் 113வது நினைவு தினம்.. சுதந்திர போராட்ட நாயகனின் வீரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.!
களைகட்டும் பக்ரீத் திருநாள் கொண்டாட்டங்கள்:
இறைவனின் ஆணைப்படி ஆடு பலியிடப்பட்ட நிலையில், அதன் பெயரிலேயே தியாகத்திருளான பக்ரீத் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், பக்ரீத்துக்கு முதல் நாள் உணவுப் பொருட்களை தயார் செய்து பின் மறுநாள் அதனை சமைத்து தொழுகையில் ஈடுபட்டு புத்தாடை உடுத்தி பெருநாளை சிறப்பிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.
அன்றைய நாளில் தங்களால் இயன்ற தர்மங்களை செய்து நண்பர்கள், உறவினர்களையும் வாழ்த்தி மனம் நெகிழுவார்கள். வெளியூர்களில் வேலை நிமித்தமாக பணியாற்றுவோர் சொந்த ஊர் திரும்பி பெருநாளை கொண்டாடுவார்கள். இந்த நாளில் பொருளாதாரத்தில் பின் தங்கியங்கியவர்களின் வீட்டுக்கு தேடிச் சென்று உதவி, அந்த நாளையும் நிறைவு செய்வார்கள். இதுவே பக்ரீத் நாளில் வரலாறாகவும், அதன் பின்னணியாகவும் கவனிக்கப்படுகிறது.
ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!