Plank Exercise (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, சென்னை (Health Tips): நம் உடலை வலுப்படுத்த தினமும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அந்தவகையில் பிளாங்க் பயிற்சி, உடல் எடையை குறைத்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவும் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இது செய்வதற்கு எளிமையான பயிற்சி என்றாலும், இதன் நன்மைகள் ஏராளம். பிளாங்க் பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் உங்கள் உடல் வலிமை பெறுவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல், மன ஆரோக்கியமும் மேம்படும். பிளாங்க் பயிற்சி செய்ய ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எந்த இடத்திலும் இந்த பயிற்சியை செய்யலாம். வெறும் தரை இருந்தால் போதும். பிளாங்க் பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் பிளாங்க் பயிற்சி (Plank Exercise Benefits) செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை இப்பதிவில் பார்ப்போம். Health Tips: உணவை சூடாக உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..? ஹெல்த் டிப்ஸ் இதோ..!

வயிற்று தசைகள் வலிமை:

பிளாங்க் பயிற்சி, வயிற்று தசைகளை வலுப்படுத்த மிகச்சிறந்த பயிற்சியாகும். இது அடிவயிறு, மேல்வயிறு மற்றும் பக்கவாட்டு தசைகள் என அனைத்து வயிற்று தசைகளையும் வேலை செய்ய வைக்கிறது. வயிற்று தசைகள் வலிமை பெற்றால், உடலமைப்பு மேம்படும் மற்றும் முதுகு வலி குறையும்.

முதுகு தசைகள் வலுப்பெறும்:

இது முதுகு தசைகளையும் வலுப்படுத்துகிறது. முதுகு தசைகள் வலிமை அடைவதால், முதுகு வலி மற்றும் தண்டுவட பிரச்சனைகள் குறையும். கணினி மற்றும் லேப்டாப் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, பிளாங்க் பயிற்சி மிகவும் அவசியம். இது முதுகை நேராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உடல் தோரணையை மேம்படுத்தும்:

பிளாங்க் பயிற்சி உடலமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வயிற்று தசைகள் மற்றும் முதுகு தசைகள் வலுப்பெறும்போது, உடல் தானாகவே நேராக நிற்கும். குனிந்து நடப்பது மற்றும் தோள்பட்டை வளைந்து இருப்பது போன்ற பிரச்சனைகள் இதன் மூலம் சரியாகும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது:

பிளாங்க் பயிற்சி செய்வது, வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்க உதவுகிறது. மற்ற உடற்பயிற்சிகளை விட அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. தினமும் பிளாங்க் பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை குறைவதுடன், உடல் ஆற்றலும் அதிகரிக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்:

மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்க தூண்டுகிறது. பிளாங்க் பயிற்சி மனதை அமைதிப்படுத்தவும், கவனத்தை சீராக்கவும் உதவுகிறது. தினமும் பிளாங்க் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்.