மார்ச் 28, சென்னை (Health Tips): ஆரஞ்சு பழம் (Orange Fruit) என்றாலே நம் அனைவரும் பிடிக்கும். இதனை பலரும் ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆரஞ்சு பழம் அதன் புளிப்பு இனிப்பு சுவை மிகுந்தது. ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவும் சில ஆச்சரியமான நன்மைகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம். Tender Coconut Benefits: கோடை வெயிலை சமாளிக்க இளநீர் குடிங்க.. நன்மைகள் என்னென்ன..?
சரும ஆரோக்கியம்:
ஆரஞ்சு பழம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். மேலும், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியம்:
இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சிறுநீரக பாதுகாப்பு:
ஆரஞ்சு பழம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கும். இதில் உள்ள சிட்ரேட் எனப்படும் ஒரு வகை அமிலம், கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.
இரும்புச்சத்து:
தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உடல் சரியாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், மற்ற உணவுகளில் உள்ள இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு இது உதவுகிறது.
புத்துணர்ச்சி அளிக்கும்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரஞ்சு பழம் செரிமானத்திற்கும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும், ஆரஞ்சு பழத்தின் புத்துணர்ச்சியான தன்மை மனதை அமைதிப்படுத்தவும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. எனவே, தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.