ஜூலை 29, ஆரோக்கியம் (Health Tips): பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம், காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுவது அவசியம். பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, பேரிட்சை, அத்தி போன்றவை உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியவை ஆகும்.
பாதாமை தினமும் பெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பாதாமை ஊறவைத்து மேல் தோல் நீக்கி சாப்பிடுவது சாலச்சிறந்தது. கைப்பிடியளவு பாதாமை இரவில் ஊரவைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் புரதசத்து, நார்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடென்டுகள், ஒமேகா 3 போன்றவை கிடைக்கும். Krishnagiri FireWorks Accident: நொடியில் நடந்த பயங்கரம்; பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து.. 8 பேர் பலி, 15 பேர் படுகாயம்.!
சுவாச கோளாறு, இதயநோய், நீரிழிவு நோய், சரும பிரச்சனை, முடி உதிர்தல், இரத்த சோகை போன்றவை ஏற்படாமல் தடுக்க பாதாமை தினமும் சாப்பிடல வேண்டும். தினம் 6 பாதம் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை அடையலாம். இரத்தத்தில் இருக்கும் கேடான கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
ஊறவைக்கும் பாதாமில் இருக்கும் சத்துக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தும். இரத்த வெள்ளை & சிகப்பு அணுக்களை அதிகரிக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும். மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தினை சீராக இயக்க உதவும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனையை சரி செய்யும். மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்கள், முக சுருக்கத்தை போக்க பாதாம் சாப்பிடலாம்.