Panangarkandu (Photo Credit: Pixabay)

மார்ச் 25, சென்னை (Health Tips): தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே பயன்படக்கூடியவை ஆகும். குறிப்பாக நுங்கு, பதனி போன்ற உணவுகள் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பதனியை நன்கு காய்ச்சி பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்றவை உருவாக்கப்படுகிறது. பனங்கற்கண்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனங்கற்கண்டின் (Panangarkandu) மகத்தான மருத்துவ பயன்களை இப்பதிவில் பார்ப்போம். Summer Tips: கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிப்பா? அருமையான தீர்வு தரும் வெங்காயம்.. விபரம் இதோ.!

மார்புச் சளி நீங்கும்:

பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டுக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது. பனங்கற்கண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். தினசரி உடல் உழைப்பு அதிகமுள்ள நபர்கள் உடல் சோர்வை நீக்கி சத்துக்களை மீட்டெடுக்க, நெய்யுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும், இதை நிலக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும். பனங்கற்கட்டில் மிளகு, பாதாம், சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கற்கண்டு பானம்:

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் வெங்காயச் சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துகள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதை பானமாக அருந்துவதால் இதய நோய் குணமாகும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு, பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது உடலுக்கு நல்லது.

குறிப்பு: நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஏற்கனவே நாள்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை பேரில், இதனை எடுத்துக் கொள்வது நல்லது.