
மார்ச் 22, சென்னை (Health Tips): கோடைகாலம் (Summer Season) என்றாலே பலருக்கும் சுட்டெரிக்கும் வெயில், தண்ணீர் பிரச்சனை, உடல்நலக்கோளாறுகள் என பாதிப்புகள் ஏற்பட தொடங்கிவிடும். அதிக வைரஸ் பரவலுக்கு வாய்ப்புள்ள குளிர்காலங்களை விட, கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் மக்களை கடுமையான பரிதவிப்புக்கு உள்ளாக்கும். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மண்பானை குடிநீர், வெள்ளரி, நுங்கு-பதநீர், மோர், கரும்பு சாறு என இயற்கை பழச்சாறுகள் பக்கம் திரும்பி இருக்கின்றனர். நாம் காய்கறிகள் கொண்டும் உடலை கோடைகாலத்தில் குளிர்விக்கலாம். சௌசௌ, பீர்க்கங்காய், முள்ளங்கி போன்றவற்றையும் சுழற்சி முறையில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில், இன்று வெங்காயத்தின் நன்மைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
வெங்காயத்தின் அசத்தல் நன்மைகள் (Benefits of Onion):
இந்திய சமையலில் மிகப்பெரிய இடத்தினை தக்க வைத்துள்ள வெங்காயம், ஒவ்வொரு வகை சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் நாட்டு வெங்காயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை (Vengayam Nanmaigal) வழங்குகிறது. ஆனால், இன்றளவில் நாட்டு வெங்காயத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரக்குழம்பு, கறிக்குழம்பு போன்ற சில வகை உணவுகளுக்கு மட்டுமே நாட்டு வெங்காயத்தை பயன்படுத்துகின்றனர். வேலை மிச்சம் என பெரிய வெங்காயம் பரிந்துரைக்கப்பட்டாலும், நாட்டு வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம். பொதுவாக வெங்காயம் உடலில் உள்ள ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது ஆகும். அதனாலேயே பண்டைய கிரீஸ் மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வெங்காயத்தினை அதிகம் உட்கொண்டு வந்தனர். ரோம் நாட்டில் வசிக்கும் மல்யுத்த ஈரர்கள், உடலில் அழகு பொலிவுக்காக வெங்காயத்தை உடலில் அரைத்தும் பூசிக்கொண்டுள்ளனர். Garlic Benefits: பூண்டு சுட்டு சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..? விவரம் இதோ..!
கோடைகாலத்துக்கு அருமருந்து:
கோடையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை குறைக்க, நாம் வெங்காயத்தை சாப்பிடலாம். வெங்காயத்தினை பொடிப்பொடியாக அறிந்து, நீரில் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால், நீர்க்கடுப்பு பிரச்சனை குறையும். வீட்டில் உள்ள குழந்தைகளை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து காக்க, மோரில் வெங்காயம் கலந்து கொடுக்கலாம். இதனால் வெப்ப பாதிப்புகள் குழந்தைகளை எளிதில் அண்டாது. தினமும் பச்சை வெங்காயம் சிறிதளவு உணவில் சேர்க்கலாம். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக்கும் கொழுப்பின் அளவை குறைக்கும். வெங்காயத்தில் இருக்கும் சல்பர், ரத்தத்தினை சுத்தம் செய்து மாரடைப்பு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கும். அலர்ஜியை எதிரிக்கும் தன்மை கொண்ட வெங்காயம், சுவாசம் சார்ந்த பிரச்சனையில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
மலச்சிக்கல் முதல் இரத்த சுத்திகரிப்பு வரை:
இன்றளவில் நாம் உண்ணும் உணவில் இருக்கும் பிரச்சனையையும், வெங்காயம் தன்னால் இயன்ற அளவு சரிசெய்யும். அல்சரை தடுக்கும் வல்லமை கொண்ட வெங்காயம், குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவி செய்யும். காசநோய்ப்பதிப்பும் வெங்காயத்தால் சரி செய்யப்படுகிறது. நமது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தவல்ல நச்சை கட்டுப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தும். மலச்சிக்கல் சார்ந்த பிரச்சனை, ஆசனக்கடுப்பு போன்றவற்றை உடல் உஷ்ணம் ஏற்படுத்துகிறது, இவ்வாறான பிரச்சனை பசரியாக வெங்காயத்தை நெயில் வதக்கி சாப்பிடலாம். வெள்ளை வெங்காயம் பெண்களை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். வெள்ளை வெங்காயத்தை பெண்கள் வதக்கி சாப்பிடலாம். வெங்காயத்தின் சத்து மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கும்.