Garlic (Photo Credit: Pixabay)

மார்ச் 21, சென்னை (Health Tips): பூண்டு, பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சிறந்த உணவாக உள்ளது. தினமும் 2 பூண்டுப் பற்களை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். இந்த பூண்டை (Garlic) சுட்டு சாப்பிட்டால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய் நோய், மாரடைப்பு, பெரும் தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, இரத்த நாளங்களை பாதுகாக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும். மேலும், எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது. பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பூண்டை பச்சையாகவோ அல்லது உணவிலோ சேர்த்து கொள்வதை தவிர, சுட்டு சாப்பிடுவதாலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவற்றை இப்பதிவில் பார்ப்போம். Benefits of Drinking Water: தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா..!

  • பூண்டை சுட்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே, சுட்ட பூண்டை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பல இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறையும். சுட்ட பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றில் ரத்தம் உறைவதை தடுக்க உதவுகிறது.
  • இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
  • சோர்வாக உணரும் போது மற்றும் உங்கள் எனர்ஜி அளவு குறைவாக இருப்பதை போல இருக்கும் போது, பூண்டை சுட்டு சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம். குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் சுட்ட பூண்டை சாப்பிடுவது அதிக பலன் தரும்.
  • பூண்டு சுட்டு சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.