ஜூலை 07, சென்னை (Health Tips): இன்றைய நவீன உலகில் உணவு பழக்க வழக்கங்கள் அதிகமாக மாறியுள்ளன. சத்தான உணவு பழக்கத்தை விட்டுவிட்டு, பாஸ்ட் புட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடுகிறோம். நம் உடலை சீராக கவனித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமானதாகும். அந்தவகையில், இயற்கையான முறையில் உடலை சுத்தப்படுத்தி, உடலுக்கு ஆற்றல் அளிக்கும் வாழைத்தண்டு சாறு (Vazhaithandu Juice) குடிப்பதால் கிடைக்கும் பயன்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Jaggery Benefits: வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சிக்கோங்க இனி சுகரே வாங்க மாட்டிங்க.!
வாழைத்தண்டு சாறு பயன்கள்:
- வாழைத்தண்டு சாறு குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது. உடலில் அஜீரணத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், இயற்கையான குளிரூட்டியாக இது செயல்படுகிறது.
- சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி, சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது. வாரத்தில் 2 முறை குடிப்பது நல்லது. இயற்கையாக உடலை சுத்திகரித்து, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- வாழைத்தண்டு சாறு, சளி மற்றும் காய்ச்சலை குறைக்கும் திறன் கொண்டது. உடல் சோர்வை நீக்கி, உடலில் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நமது உடலில் தடித்த நரம்புகளை தளர்த்து, உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.
குறிப்பு:
இப்பதிவில் குறிப்பிட்டுள்ளவற்றை கடைபிடிக்கும் முன், மருத்துவர் அல்லது உரிய நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.