
ஜூலை 05, சென்னை (Chennai News): பிஸ்கட், பால் பாக்கெட், சீனி (Sugar) போன்றவை ஒவ்வொரு நாளும் மக்களால் தினசரி ஒருவேளையாவது பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. தினமும் டீ, பால் போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்கள் சீனி என்ற சர்க்கரையின் செயற்கை இனிப்பு சுவையூட்டியை பயன்படுத்துகின்றனர். சீனி கரும்பில் இருந்து பெறப்படும் பொருள் என்றாலும், அதன் வெண்மைத்தன்மைக்கு பின்னணியில் பல செயல்பாடுகள் இருக்கின்றன. ஆகையால், நாம் இயன்றவை இனிப்பு சுவைக்கு வெல்லம் (Jaggery Benefits Tamil), கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். நாட்டுச்சர்க்கரை நல்லது. ஒருவேளை நீங்கள் சீனியை அதிகம் எடுத்துக்கொள்பவர் என்றால், அதற்கு பதிலாக இனி வெல்லம் எடுக்கும். அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். வெல்லத்தில் (Vellam Nanmaigal) இருக்கும் ஆண்டி-ஆக்சிடென்ட், இரும்புசத்து, செலினியம், மெக்னீசியம் சத்துக்கள் உடலுக்கு நல்லது. Health Tips: பிரிட்ஜில் முட்டையை வைப்பது நல்லதா? கெட்டதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.!
வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Vellam Sapiduvathal Erpadum Nanmaigal):
சித்த மருத்துவத்தில் சீனி சேர்க்கப்படுவது இல்லை. வெல்லமே சேர்க்கப்படும். வெல்லத்தில் உள்ள இரும்புசத்து இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பயன்படும். இதனால் சருமம் மேம்படும், உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். வளர்சிதை மாற்றம் மேம்படும். ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா, தொண்டை புண், இருமல், சளி போன்றவற்றுக்கும் வெல்லம் அருமருந்து ஆகும். வெல்லத்தில் காணப்படும் பொட்டாசியம் இதயத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். இரத்த அழுத்தம் குறையும். நுரையீரல், உணவுக்குழாய், வயிறு ட்பட உடலின் உள்ளுறுப்புகள் உறுதிப்படும். பலருக்கும் இன்றளவில் ஏற்படும் மலச்சிக்கல் செரிமானத்தை தடுக்கவும் உதவி செய்கிறது. வெல்லம் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும். உணவு எடுத்துக்கொண்டபின் வெல்லம் சிறிதளவு சாப்பிட்டால் செரிமான நொதிகள் சீராக செயல்படும். இதனால் உணவு விரைந்து ஜீரணமாகும். உடலில் உள்ள கேடான நச்சுக்கள் வெளியேற்றப்படும். கல்லீரல் சுத்தப்படும்.
நினைவில் கொள்க:
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!