Hug Day (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, சென்னை (Chennai): ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே (Hug Day) எனும் கட்டிப்பிடி தினம் கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பது பண்டைய காலங்களில் இருந்தே இருக்கிறது. பாசம், அக்கறை மற்றும் உணர்வை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பது பொதுவான வழியாகும். தமிழில் இதனை கட்டிப்பிடி வைத்தியம் என்பர். கட்டிப்பிடித்தலில் காமம் தாண்டி அன்பை பரிமாறிக்கொள்ள நல்ல வழியாகும். அதனால் இந்த தினத்தில் உங்கள் அன்புக்குரியவரை இருக்கமாக கட்டிப்பிடியுங்கள். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

அரவணைப்பு நாள்:

நீண்ட நேரம் அரவணைக்கும் போது மூளையில் இருந்து ஆக்ஸிடாசின் என்ற மகிழ்ச்சி ரசாயனத்தை வெளியிடுகிறது. இது உடனடியாக ஒருவரின் மனநிலையை உயர்த்தி மகிழ்ச்சியடையச் செய்யும். மேலும் நம்மை நேசிக்கக்கூடிய ஒருவரைக் கட்டிப்பிடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே இந்த நாளில் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் நேசிக்கக் கற்றுக்கொள்வற்கு ஹக் டே சிறந்த வாய்ப்பாகும்.