டிசம்பர், 9: கோடை போல வாட்டிவதைத்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மழைக்காலம் (Rainy Season) வந்துவிட்டது. இதனால் எப்போதும் குளிர், மழை பொழியும் சத்தம் என குளிர்ச்சி நம்மை குதூகலித்து வருகிறது. நாம் அன்றாடம் பார்க்கும் வேலைகளையும் மீறி நமக்கு திடீர் உறக்க நிலையம் குளிரினால் ஏற்படுகிறது.
தொடர் வேலை பார்க்கும் செயலில் சலிப்பினை ஏற்படுத்தி, கண்ணார மழையினை வேடிக்கை பார்த்துவிட்டு உறங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பருவமழை காலங்களில் இவ்வாறான நிலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுவது இயல்பு. மருத்துவ ரீதியில் இப்படியான எண்ணத்திற்கு அறிவியல் சார்ந்த காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உணர்ச்சி, மழை ஒலி, ஈர்ப்பத அளவு, புற ஊதா கதிர்களின் பற்றாக்குறை போன்றவை அவ்வாறான மனநிலையை ஏற்படுத்துகிறது. மழையின் சத்தம் உருவாக்கும் அதிர்வெண் நம்மை உறக்க நிலைக்கு அல்லது ஓய்வு நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்நிலையை மாற்றி சுறுசுறுப்புடன் செயல்பட சில முறைகள் உள்ளன. அவையாவது, Natural Beautiful Countries: உலகளவில் இயற்கையுடன் பொருத்தி வியப்பை ஏற்படுத்தும் நாடுகள் எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
நாம் இருக்கும் அறையில் பிரகாசமான ஒளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வெளிச்சம் இருந்தால் நல்லது. ஆனால், மழை நேரத்தில் அது வாய்ப்பில்லாதது என்பதால், பிரகாசமான ஒளியை ஏற்படுத்திக்கொள்ளவும். ஒளி குறைவாக இருந்தால் மந்த நிலை ஏற்படும். இயற்கை வெளிச்சம் வீட்டின் உட்புறம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
குளிர்காலத்தில் இரவு உடையுடன் போர்வை போர்த்தி இருந்தால் தூக்க மனநிலை ஏற்படும். அதனால் சரியான உடையை அணிந்து கொள்ள வேண்டும். இது மந்தநிலையை மாற்றம் செய்ய உதவும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்புடன் இருக்க உதவும். மதிய நேர உணவுக்கு பின் லேசான நடைப்பயிற்சி நல்லது.
மனதை விழிப்புடன் வைத்திருப்பது, புத்துணர்ச்சிக்கு வழிவகை செய்யும். நீங்கள் விரும்பி குடிக்கும் சூப்பை தயாரித்து குடிக்கலாம். மழைக்காலத்தில் சூப் குடிப்பது மனசோம்பலை நீக்கும். சுறுசுறுப்பை அதிகரிக்கும். சுறுசுறுப்பான இசையினை கேட்டு மனநிலையை மாற்றலாம். அவசர பணிகள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைய குட்டி உறக்கம் போடலாம்.