Children Obesity (Photo Credit: Thequint.com)

பிப்ரவரி 09: இன்றுள்ள நவீன வாழ்க்கை (Mordern Culture) முறையின் காரணமாக குழந்தைகள் (Children) பலரும் உடல் பருமனோடு (Obesity), அதிக எடைகொண்டு இருக்கின்றனர். இதனால் காலப்போக்கில் இதயம் சார்ந்த நோய்கள் (Heart Problems), நீரிழிவு (Diabetes) மற்றும் புற்றுநோய்கள் (Cancer) போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் (Health Issues) வழிவகை செய்கிறது.

சிறுவயதில் உடல் பருமனுடன் இருக்கும் குழந்தைகளின் மன & உடல் நலனை பாதிக்கும் விஷயங்களாலும் உடல் பருமன் என்பது அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து உணவு மற்றும் வாழ்க்கை (Food & Life Style) பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் பருமனை குறைக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள குழந்தைகள் வயது மீறிய வளர்ச்சியோடு காணப்படுகிறார்கள். இவர்களுக்கு அதிக கொழுப்பு உள்ளதா என சோதனை செய்துகொள்ள வேண்டும். உடல் பருமனுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, உளவியல் சிக்கல், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை போன்றவற்றை ஆராய வேண்டும். RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு – முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

ஒருசில குழந்தைகள் ஜீன்களால் உடல் பருமனோடு பிறக்க வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி (Exercise) இல்லாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது போன்ற பல காரணத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது. துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்கள் போன்றவையும் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

இளம் வயதிலேயே அதிக எடை கொண்டவர்கள் பக்கவாத பிரச்சனையால் அவதிப்பட 2 மடங்கு வாய்ப்புகள் அதிகம் என்பதும், உடல் எடையால் இதயத்தில் (Heart Pressure) அழுத்தம் அதிகமாகி இரத்த ஓட்டத்தை பாதிக்க வைக்கும். அதேபோல, சுவாச பாதைகளில் சேரும் கொழுப்புகளால் சுவாசிக்கும் பிரச்சனை ஏற்படும். உறக்கத்தில் மூச்சுத்திணறல் (Shortness of Breath) ஏற்படலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 09, 2023 12:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).