Chicken Recipes (Photo Credit: Pixabay)

மார்ச் 17, சென்னை (Health Tips): ஒவ்வொரு நாளும் நாம் நமது உடல்நலனை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி மேற்கொள்தல் என பலவிதமான செயல்களை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக காலை டிபன் வகை, மதியம் அரிசி சாதம், இரவில் தோசை, சப்பாத்தி போன்றவற்றை பலரும் பரிந்துரைத்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒருசிலர் தங்களுக்கு பிடித்த உணவுகளை தினமும் சுழற்சி முறையில் சாப்பிடாமல், அதனை அனுதினமும் தொடருகின்றனர். இவ்வாறான செயல்முறை உடல் நலனில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் தன்மையை உண்டாகும். Benefits of Cloves: கிராம்பில் உள்ள நன்மைகள் என்ன..? விவரம் உள்ளே..! 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் உடலநலப் பிரச்னைகள்:

அந்த வகையில், அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவாக கோழி இறைச்சி இருக்கிறது. சிக்கன் கிரேவி, குழம்பு, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் ரைஸ், பட்டர் சிக்கன் என பல வகைகள் இருக்கின்றன. இதனை எப்போதாவது சாப்பிடாமல் இருந்தால் பிரச்சனை இல்லை. அதே நேரத்திl, தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் கொண்டால், அது மிகப்பெரிய உடல்நலனை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும். இதனால் எலும்பு, மூட்டு பிரச்சனை ஏற்படும். இதய நோய் பாதிப்பும் உண்டாகும். சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.