ஏப்ரல் 30, புதுடெல்லி (New Delhi): வங்கி (Bank) சென்று லோன் (Loan) வாங்க நாள் கணக்கில் அலைந்த காலம் போய், மொபைலிலேயே எளிமையாகவும் உடனே அப்ரூவல் செய்து பணம் பெறுவது போன்ற செயலிகள் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. கடன் வாங்குபவரின் பின்னணிகள், நடைமுறைகளை சரிபார்த்து வழங்க வேண்டிய லோன், இப்போது பர்சனல் லோன் ஆப்ஸ்கள் (Instant Personal Loan Apps) மூலம் எவ்வளவு எளிமையாக வழங்கப்படுகிறதோ அதே அளவில் ஆபத்தும் உள்ளது.
ஆன்லைன் லோனின் ஆபத்துகள்: சில கடன் வழங்கும் செயலிகளில், கடன் பெறுபவரின் தொலைப்பேசி எண் வாங்கப்படுகிறது. அதன்மூலம் அதிலிருக்கும் எண்கள், புகைப்படம், மற்றும் தனிப்பட்ட விவரம் அனைத்தையும் சேகரித்து வைத்து செயலி பயன்படுத்துபவரை மிரட்டி பணம் பறிக்கும் செயலிகளும் உள்ளது. 30% பிராசஸிங் கட்டணம் பிடித்துக்கொண்டு கடன் வழங்க்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தாதவர்களுக்கு வட்டி அதிகரித்துக் கொண்டே செல்லும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவோ தொலைபேசி வாயிலாகவோ மோசடி செய்பவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழகம், கர்நாடக, ஆந்திரா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில், கடன் செயலிகளில் பணம் வாங்கியவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் தொலைபேசியில் உள்ளவர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி வந்த கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். ஒரு சில செயலிகளை டொன்லோட் செய்வதால் கூட தரவுகள் திருடப்பட்டு மிரட்டகள் வருகின்றன. இதனால் பலரும் தம் உயிரை மாய்த்துள்ளனர். மோசடி லோன் ஆப் வழக்குகள் கடந்த ஒரு சில வருடங்களாக அதிகரித்து வருகின்றது. International Jazz Day 2024: "கண்கள் அறியா காட்சி.. நாசி நுகரா நறுமணம்.. இதழ் அறியா சுவை.. செவிக்கு மட்டும் வரம்.." சர்வதேச ஜாஸ் தினம்..!
ஆன்லைன் லோனில் கவனிக்க வேண்டியவை: இதன் பின் மே மாதம் கூகுள் நிறுவனம் பர்சினல் லோன் பற்றி பாலிசிகளை அதிகப்படுத்தியது. இந்தியாவில் பர்சினல் லோன் ஆப்ஸ்களின் தகுதி தேவைக்கான கூடுதல் சான்றிதழை (additional proof of eligibility requirements) சமர்பிக்க வேண்டும். கூகுள் நிறுவனம் இந்த வித அப்டேட்டை மே11 லிருந்து அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதை இந்தியா, இந்தோனேசியா, மற்றும் பிலிபைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
பர்சனல் லோன்களை வழங்க, RBI-ல் உரிமம் பெற்று அதை கூகுள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதும் இந்த செயலிகள் நேரடியாக பணத்தை கடனாக வழங்காமல் வங்கிகள் மூலம் பயனர்களுக்கு கடன் எளிமையான வங்கித் தரும் பிளாட்ஃபாமாகவே செயல்படும். தற்போது எவ்வளவு பாதுகாப்பு முறைகளைக் கொண்டிருந்தாலும் மோசடி செயலிகளும் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதனால் அவசர காரணத்திற்காக கடன் வாங்க நினைப்பவர்கள் முடிந்த அளவு இது போன்ற செயலிகளைத் தவிர்ப்பது நல்லது. தாங்கள் உடனடியாக கடன் வாங்கினால் அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்தி விடுங்கள். இதுவரை வழக்கு பதிந்தவர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தாதவர்களாகவே இருந்துள்ளனர். அத்துடன் செயலியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு allow கொடுக்கும் போது நன்கு படித்துப்பார்க்க வேண்டும்.