International Day of Innocent Children Victims of Aggression (Photo Credit: LatestLY)

ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): ஐக்கிய நாடுகளால் ஆகஸ்ட் 19, 1982 அன்று அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம் (International Day of Innocent Children Victims of Aggression) அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு: 1982 லெபனான் பாலஸ்தீன் போரில் பெண்கள், குழந்தைகள் என பலர் தீவிரமாக பாதிக்கப்பட்டனர்.போர் நிகழும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது, மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 250 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர். இந்தக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் துன்பங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் இன்னும் அதிகமான நடவடிக்கைகள் தேவை என்பதை ஐ.நா உணர்ந்தது. அதற்காக தான் ஐக்கிய நாடுகளால் ஆகஸ்ட் 19, 1982 அன்று அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம் அனுசரிக்கப்படுகிறது. Lok Shaba Election Results 2024: பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பின்னடைவு? காங்கிரஸ் வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.!

நோக்கம்: ஒவ்வொரு ஆண்டும், 200 மில்லியன் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையால் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகள் இத்தகைய மோசமான பாதிப்புகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.