ஜூன் 04, வாரணாசி (Varanasi News): 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. உலகமே உற்றுநோக்கி வரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, தேர்தலில் களம்கண்ட 8,320 வேட்பாளர்களும் காத்திருக்கின்றனர். 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Pragg stuns World Champion Ding Liren of China: சீன வீரரை செஸ் போட்டியில் மண்ணைக் கவ்வவைத்த இந்தியனாக பிரக்யானந்தா; நார்வே செஸ் போட்டியில் அசத்தல்.!
பிரதமருக்கு பின்னடைவு: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6,223 வாக்குகள் பின்தங்கி இருக்கிறார். அஜய் ராய் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
ராகுல் முன்னிலை: இதனால் அடுத்தடுத்த சுற்றுகள் முடிவை எதிர்பார்த்து அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். அதேபோல, ராகுல் காந்தி தான் போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார். காலை 09:30 மணி நிலவரப்படி பாஜக 285 தொகுதியிலும், காங்கிரஸ் 221 தொகுதியிலும் மற்றவை 29 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.
Breaking
Narendra Modi is trailing by more than 6000 votes from Varanasi and Congress candidate Ajay Rai is leading as per election Commission.
This is massive. This is huge. pic.twitter.com/ZvayuFOC7o
— Anshuman Sail Nehru (@AnshumanSail) June 4, 2024