Whirlpool (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 25, மிச்சிகன் (World News): அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் (Michigan) மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகளாவிய பல்நோக்கு நிறுவனம் வேர்ல்பூல் (Whirlpool Corporation). இந்நிறுவனத்தில் நேரடியாக 59,000 பணியாளர்கள் உலகளவில் பணியாற்றி வருகின்றனர். Man Escape from Death Video: நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுக்குநூறான இருசக்கர வாகனம்; மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வைரல் வீடியோ இதோ.! 

எதிர்காலம் கருதி பணிநீக்கம் என சிஇஓ அறிவிப்பு: வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் வேர்ல்பூல், சமீபத்தில் அமெரிக்காவில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் கடந்த ஜனவரி மாதம், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் பீட்டர்ஸ், நிறுவனத்தின் எதிர்காலம் கருதி பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனவரி மாதம் தெரிவித்தார். Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷு: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.! 

விற்பனை குறைந்ததால் நடவடிக்கை: அதன்படி, தற்போது வேர்ல்பூல் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவில் குறைந்துள்ள விற்பனை காரணமாக நிறுவனம் எதிர்காலம் கருதி இம்முடிவு எடுத்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கையாளுதல் என்ற கொள்கையின் பேரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை காரணமாக, 400 மில்லியன் டாலர் செலவுகள் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.