அக்டோபர் 23, சென்னை (Festival News): தீபாவளி (Diwali) உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த 2024-ஆம் ஆண்டு, தீபாவளி அக்டோபர் 31 அல்லது நவம்பர் 01 அன்று கொண்டாடப்படுமா என்று மக்கள் குழப்பத்தில் இருப்பதால், அதற்கான பதிலை இப்பதிவில் பார்ப்போம். Diwali 2024: பட்ஜெட் பத்மநாபன்கனே! தீபாவளி பர்சசிங் பிளான் சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
பொதுவாக தீபாவளி கார்த்திகை மாதம் வரும் அமாவாசையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அமாவாசை (New Moon) வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மதியம் 3.52 மணிக்கு தான் தொடங்குகிறது. மேலும், இதற்கு அடுத்த நாள் நவம்பர் 01-ஆம் தேதி மாலை 6.16 மணி வரை இருக்கிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31-ஆம் தேதியா அல்லது நவம்பர் 01-ஆம் தேதியா என்ற குழப்பம் நிலவியது. எந்த நாளின் இரவில் அமாவாசை இருக்கிறதோ, அன்றைய நாளே தீபாவளி (Diwali Festival) நாளாகும். எனவே, வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும். Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..!